டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் திருவள்ளுவர் தினமான அன்றும் தற்காலிகமாக மூடப்படும்

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் திருவள்ளுவர் தினமான 15.01.2025 அன்றும், குடியரசு தினமான 26.01.2025 அன்றும் தற்காலிகமாக மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.

Update: 2025-01-11 11:31 GMT
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ; (F.L-1), F.L-2/F.L-3/ F.L-3A /FL-3AA மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி திருவள்ளுவர் தினமான 15.01.2025 (புதன் கிழமை) அன்றும், குடியரசு தினமான 26.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. . மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் (F.L-1) மற்றும் F.L-2/F.L-3/F.L-3A/FL-3AA மற்றும் FL-11 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Similar News