குமரியில் சமத்துவ பொங்கல் ; கலெக்டர் பங்கேற்பு

அகஸ்தீஸ்வரம்

Update: 2025-01-11 11:38 GMT
குமரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் இன்று (11.01.2024) நடத்திய சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமை தாங்கி  பேசுகையில்:-       இவ்விழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டது.  தொடர்ந்து மண்பானைகளில் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு மஞ்சள், கரும்பு, கிழங்கு வகைகள், பழங்கள் போன்றவற்றை சூரிய பகவானுக்கு  படைக்கப்பட்டது.  மேலும் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார முறைப்படி வேட்டி, சேலை அணிந்து, பொங்கலிடப்பட்டது.          இவ்விழாவில் தமிழக பாரம்பரியமான கலைகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள்  சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்பட்டது. நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சமத்துவ பொங்கலில் கலந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். என கூறினார்.         விழாவில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், விவேகானந்தா கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயந்தி, விவேகானந்தா கல்லூரி செயலாளர் ராஜன், வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாபயணிகள், மாணவ மாணவியர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Similar News