அரசு மருத்துவமனை வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா
வேடசந்தூரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது
வேடசந்தூரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. டாக்டர்கள் அனைவரும் பாரம்பரிய பட்டு வேட்டி சட்டை அணிந்திருந்தனர். பெண் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பட்டுச்சேலை கட்டி பாரம்பரிய உடையுடன் வந்திருந்தனர். ஆஸ்பத்திரி பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்பு அனைவருக்கும் பொங்கல் வழங்கி சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு அரசு தலைமை டாக்டர் லோகநாதன் தலைமை வகித்தார். டாக்டர்கள் சக்திதாரணி, விஜய்ஆண்டனி, கார்த்திக், ஆகியோர் கலந்து கொண்டனர்.