தமிழர்களின் பண்பாட்டு கலாச்சாரமான பொங்கல் விழா எங்களை வெகுவாக கவர்ந்தது.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக். ரெய்ன்ஹார்ட் நோபவுர் பேட்டி.

தமிழர்களின் பண்பாட்டு கலாச்சாரமான பொங்கல் விழா எங்களை வெகுவாக கவர்ந்தது.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக். ரெய்ன்ஹார்ட் நோபவுர் பேட்டி.

Update: 2025-01-11 12:50 GMT
தமிழர்களின் பண்பாட்டு கலாச்சாரமான பொங்கல் விழா எங்களை வெகுவாக கவர்ந்தது.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக். ரெய்ன்ஹார்ட் நோபவுர் பேட்டி. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்த அயர்லாந்தை சேர்ந்த டாக்டர் சீமஸ் ஓ டுமா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக். ரெய்ன்ஹார்ட் நோபவுர், ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர்.ஷாலினி சிங் ஆகியோர் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி வரும் அழகை கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளரிடம் தெரிவித்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக். ரெய்ன்ஹார்ட் நோபவுர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்த எங்களுக்கு, தமிழர்களின் பண்பாட்டு கலாச்சாரம் வெகுவாக ஈர்த்தது. பழமையும், புதுமையும் இணைத்து பாரம்பரியத்தின் சுவடு மாறாமல் கல்லூரி மாணவ - மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து, நடனமாடி பொங்கல் விழாவை கொண்டாடியது எங்களை வியப்பில் ஆழ்த்தியது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழா, கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற மன நிறைவை எங்களுக்கு ஏற்படுத்தியது. அனைத்து தமிழர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். கோலாகலமாக நடந்த இந்த விழாவில் அனைத்து துறை இருபால் பேராசிரியர்களும், கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவியரும் கலந்து கொண்டனர்.

Similar News