தஞ்சாவூர் அருகே சிறுமியைப் பாலியல் கொடுமை செய்த முதியவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி வெங்கடாசலபதி நகரைச் சேர்ந்தவர் சி.ஜெயசந்திரன் (60). இவர் தற்போது 14 வயதுடைய சிறுமியை 2022 ஆம் ஆண்டிலிருந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அச்சிறுமி பள்ளி வகுப்பறையில் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்ட தலைமையாசிரியை விசாரித்து, வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஜெயசந்திரனை வியாழக்கிழமை கைது செய்தனர்.