ஸ்ரீ சொர்ண லிங்கேஸ்வரர் சுவாமிக்கு சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்..
ஸ்ரீ சொர்ண லிங்கேஸ்வரர் சுவாமிக்கு சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்..
ராசிபுரம் பட்டணம் சாலையில் பகுதியில் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சொர்ண லிங்கேஸ்வரர் சுவாமிக்கு சனி பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த ஸ்ரீ சொர்ண லிங்கேஸ்வரர் சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் சிவ பெருமாள் சிறப்பாக செய்திருந்தார்.