திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் மந்தாகினி கலந்து கொண்டு பொங்கல் வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்வின் போது உடன் நேர்முக உதவியாளர் முருகன், கண்காணிப்பாளர் பர்வீன் பானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.