திருவண்ணாமலை மாவட்ட மற்றும் ஒன்றிய அமைப்புக் குழுக்கூட்டம்.
உடன் நிர்வாகிகள் பலர் பங்கேற்பு.
பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட மற்றும் ஒன்றிய அமைப்புக் குழுக்கூட்டம் இன்று போளூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ப.க.பா. இயக்கத்தின் மாநில செயலாளர், திரு.ஜெ.கிருஷ்ணமூர்த்தி ,சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், அ.நாகராஜன் மற்றும் வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் ம. விசாலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இந்நிகழ்வின் போது உடன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சி.சென்னம்மாள், ஆவணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனைவர்.T.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.