நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்!
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி முன்னிலையில் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயா் பூபதி பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொண்டனர்.
நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடா் அரசு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் அரசு அலுவலகங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.அதன்படி நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் காலை முதல் மாலை வரை பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுடன் பொங்கல் பண்டிகை களைகட்டியது. முன்னதாக, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி முன்னிலையில் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயா் பூபதி பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொண்டனர்.மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாநகராட்சி அலுவலகர்கள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், கயிறு இழுத்தல், சைக்கிள் ஓட்டுதல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனா்.கயிறு இழுக்கும் போட்டியில் ஒருபுறம் ஆண் கவுன்சிலர்களும், மறுபுறம் பெண் கவுன்சிலர்களும், கலந்துகொண்டனா். இதையடுத்து, பல்வேறு துறை அலுவலா்கள் இணைந்து நடனமாடுதல், பாடல் பாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்த பொங்கல் விழாவில் நாமக்கல் மாநகராட்சி செயற்பொறியாளர் சண்முகம்,மாநகராட்சி துப்புரவு அலுவலா் திருமூா்த்தி,உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.