அரசம்பட்டி தென்னீஸ்வரன் கோவிலில் மகா சனி பிரதோஷ வழிபாடு.
அரசம்பட்டி தென்னீஸ்வரன் கோவிலில் மகா சனி பிரதோஷ வழிபாடு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி தென்னீஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை 4 மணிக்கு மூலவர் தென்னீஸ்வரனுக்கும் நந்தி பகவனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ராமநாதீஸ்வரர் அலங்காரத்துடன் ஸ்ரீ தென்னீஸ்வரன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். பின்னர் அனைவருக்கும பிரசாதம் வழங்ப்பட்டது. மேலும் சனி பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் அது ஆயிரம் பிரதோஷ நாட்களில் தொடர்ந்து சிவனை வழிபட்ட பலனைத் தரும் என்று சொல்லப்படுகிறது. சிவபெருமானையும் சிவனின் வாகனமாகிய நந்தி தேவரையும் பிரதோஷ வேளையில் வழிபடுவது நமக்கு சிவலோக பதவியை பெற்று தரும். பிரதோஷத்தன்று சிவபெருமானையும் நந்தி தேவரையும் வழிபடுவதால் சகல விதமான தோஷங்களும், பாவங்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. பிரதோஷ தினத்தன்று 'ஓம் நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவதுடன் மாணிக்கவாசகர் அருளிச் செய்த சிவபுராணத்தையும் படிக்க வேண்டும். இதைத் தவிரவும் கோயிலிலோ அல்லது வீட்டிலோ பிரதோஷ நேரத்தில் ‘ஓம் ஹம் சிவாய நமஹ’ என்னும் மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இதனால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.