திருமாவளவன் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் - முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை ஒட்டி விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2025-01-11 16:10 GMT
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்று அறிவித்ததுடன் அதற்கு பானை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த அங்கீகாரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அளித்துள்ளது. இந்நிலையில், இதனையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விசிகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். அன்புச் சகோதரர் திருமாவளவனின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணிப் பாராட்டுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Similar News