தேசிய நெடுஞ்சாலையில் விபத்து இருவர் பலி

கார் இருசக்கர வாகனம் மோதியதில் இருவர் பலி ஐந்து பேர் காயம் அரசு மருத்துவமனையில் அனுமதி

Update: 2025-01-11 17:16 GMT
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திட்டக்குடியில் இருந்து சமயபுரம் செல்வதற்காக காரில் ஏழு நபர்கள் வந்து கொண்டிருந்தனர் அப்பொழுது கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் கார்ஓட்டி வந்து கொண்டிருந்தார் அப்பொழுது பெரம்பலூர் தண்ணீர் பந்தல் அருகே வாலிகண்டபுரம் அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ஸ்மித் 16 முன்னாள் சென்று கொண்டிருந்தார் எதிர்பாராத விதமாக கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஸ்மித் மற்றும் காரில் பயணித்த திட்டக்குடி பகுதியில் சேர்ந்த துர்கா என்ற பெண்மணியும் இறந்து விட்டனர் காரில் பயணித்த பாலாஜி ரம்யா யாழினி சாய் ஆகிய அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News