ஸ்ரீ மஹா நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
திரளான பக்தர்கள் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஶ்ரீ மங்களாம்பிகை சமேத ஶ்ரீ சிம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் ஆவணியாபுரம் கிராமத்தில் சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ மஹா பெரிய பேசும் நந்தி பகவானுக்கு இன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்ற நிலையில் தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.