சேத்தியாத்தோப்பு: இருசக்கர வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு
சேத்தியாத்தோப்பில் இருசக்கர வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார்;
கடலூர் மாவட்டம் புவனகிரி, சேத்தியாத்தோப்பு அடுத்த மிராலூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சுகுமார் மிராலூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக சுகுமார் மீது மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.