வீட்டின் கதவு உடைத்து பீரோவில் இருந்த தங்க நகைகள் கொள்ளை
திருநின்றவூரில் முதல் மாடியில் உள்ள வீட்டின் கதவு உடைத்து பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் கொள்ளை;

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் முதல் மாடியில் உள்ள வீட்டின் கதவு உடைத்து பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் கொள்ளை திருவள்ளூர் அருகே திருநின்றவூர், பிரகாஷ் நகர், பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 37. இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2 ஆம் தேதி மாலை, வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்றார். இந்நிலையில், நேற்று இரவு அவரது வீடு திறந்து கிடப்பதாகவும், வீட்டில் இருந்து சத்தம் வருவதாக அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவரது மாமனார் கிருஷ்ணன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் முதல் மாடியின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு படுக்கை அறையில் இருந்த பீரோவில் இருந்த சுமார் 25 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து புகாரின் பேரில் திருநின்றவூர் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.