அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் கருத்தரங்கம்

குமரி;

Update: 2025-02-04 11:56 GMT
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் கருத்தரங்கம்
  • whatsapp icon
கன்னியாகுமரி அருகே  அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறை சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் ஆடிட்டர் பயிற்சி பற்றிய கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் டி.எஸ். ஜெயந்தி தலைமை தாங்கினார். வணிகவியல் துறை தலைவர் முனைவர் ஆர். தர்ம ரஜினி வரவேற்று பேசினார். சென்னை ஸ்மார்ட் லேன் எஜுகேயர் இயக்குனர் ஆடிட்டர் சுமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பேராசிரியர் ராஜ பிரியா நன்றி கூறினார். நிகழ்வில் சென்னை ஸ்மார்ட் லேன் எஜுகேயர் பிரேம்குமார், வணிகவியல் துறை பேராசிரியர்கள் முருக பூபதி,ஜெயபிரபா, ஜானகி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News