விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
தமிழக அரசைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்;
மதுரை திருப்பரக்குன்றம் மலையைக் காக்க தமிழக அரசு தவறியதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.விழுப்புரம் ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரத் தலைவா்கள் வடிவேல் பழனி, விஜயன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலா் சதாசிவம், மாநிலச் செயற்குழு உறுப்பினா் சிவ.தியாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினா் சுகுமாறன் மற்றும் கட்சியின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.