பிரத்யேக செயலி மூலம் போதைப்பொருள் விற்பனை
செய்பவர்கள் குறித்து தெரிவிக்க கோரிக்கை;

நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது நாகை மாவட்டத்தில், போதையில்லா தமிழகத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், Drug Free TN என்ற பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியின் மூலமாக, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் போதைப் பொருளை விற்பனை செய்பவர்கள் பற்றி தெரிவிக்கலாம். தகவல் தருபவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.