ஊதிய உயர்வு வழங்க கோரி மீன்வளக்கல்லூரியில் பணியாளர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு அடிப்படை ஊதியம் வழங்ககோரி டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தற்காலிக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2025-02-05 11:41 GMT
ஊதிய உயர்வு அடிப்படை ஊதியம் வழங்ககோரி டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தற்காலிக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் திருவள்ளூர் மாவட்டம்,பொன்னே ரியில் இயங்கி வரும் டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தற்காலிக பணியாளர்களாக 50க்கும் மேற்பட்டோர் பத்தாண்டுகளுக்கு மேலாக பணி செய்து வருகின்றனர். பொன்னேரி மீஞ்சூர் பழவேற்காடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பணி செய்து வரும் இவர்களுக்கு இதுவரையில் அடிப்படை சம்பளம் ஊதிய உயர்வு எதுவும் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தங்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திடீர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வாயல் முன்பு நின்று கொண்டு கல்லூரிக்குள் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கல்லூரியின் முதல்வர் ஜெய சகிலா கல்லூரிக்குள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Similar News