கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
நத்தத்தில் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்;

தமிழ்நாடு வருவாய்த் துறையில் பணியாற்றும் கிராம உதவியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நத்தம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க நத்தம் வட்ட தலைவர் தனபால் தலைமையில் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.