தேர்தல் முன் விரோதம் காரணமாக முன்னாள் வார்டு உறுப்பினருக்கு அறிவாள் வெட்டு
திருவள்ளூர் அருகே தேர்தல் முன் விரோதம் காரணமாக முன்னாள் வார்டு உறுப்பினர் இளைஞர்களால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது;
திருவள்ளூர் அருகே தேர்தல் முன் விரோதம் காரணமாக முன்னாள் வார்டு உறுப்பினர் இளைஞர்களால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் முன்னாள் வார்டு உறுப்பினர் ஜெகதீசன் தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது அதே கிராமம் அம்பேத்கர் நகர் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் என்பவர் மகன் சேகுவாரா என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் இருந்து தகராறு இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் நண்பர்களுடன் ஜெகதீசனை நோக்கி வந்த சேகுவாரா உள்ளிட்ட மூன்றுக்கும் மேற்பட்டோர் கையில் வைத்து இருந்த கத்தியை எடுத்து ஜெகதீசன் தலையில் பலமாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர் இதனால் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்த முன்னாள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஜெகதீசனை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கடம்பத்தூர் காவல் நிலைய போலீசார் ஜெகதீசனை வெட்டிவிட்டு தப்பிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினரை வெட்டிய சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது