லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
ஊத்துக்கோட்டை தாமரை குப்பத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் உரிய அனுமதியுடன் மண் எடுக்காமல் மாற்று இடத்தில் மண் எடுப்பதாக கூறி மண் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்;
ஊத்துக்கோட்டை தாமரை குப்பத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் உரிய அனுமதியுடன் மண் எடுக்காமல் மாற்று இடத்தில் மண் எடுப்பதாக கூறி மண் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாமரை குப்பம் ஜீரோ பாயிண்ட் அருகே அருகே அனுமதிக்கப்பட்ட இடத்தில் குவாரியில் சவுடு மண் எடுக்காமல் வேறு இடத்தில் மண் எடுப்பதாக கூறி அப்பகுதி மக்கள் மண் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் நூற்றுக்கும் மேற்பட்ட மண் லாரிகள் சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் பகுதியில் அதிக அளவில் பாரம் ஏற்றிக்கொண்டு செல்வதால் கால்வாய் தொடர்ந்து சேதம் ஆவதாகவும் பெரியபாளையம் ஊத்துக்கோட்டை சாலையில் செல்லும் மண் லாரிகளில் தார்பாய் கூட கட்டப்படாமல் மண் கொண்டு செல்லப்படுவதால் தூசி பறந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர் தகவலறிந்து அங்கு வந்த ஊத்துக்கோட்டை போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் சமரசம் மேற்கொண்டனர் மண் லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது