குமரி மாவட்டம் புதுக்கடை அருகேயுள்ள சாத்தறை என்ற பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பதாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையியான போலீசார் அந்த பகுதியை கண்காணித்தனர். நேற்று மாலை அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சென்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் 100 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்த கஞ்சாவுடன் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்த போது அவர் மருதங்கோடு பகுதியை சேர்ந்த சஞ்சய் (29) என தெரிய வந்தது. டிரைவரான இவர் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரிந்தது. புதுக்கடை போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரது வங்கி கணக்கை முடக்கி, கைது செய்து சிறையில் அடைத்தனர். சஞ்சய் மீது மார்த்தாண்டம் காவல் நிலையத்திலும் வழக்குகள் உள்ளது.