ஆலங்குடி அருகே கல்லாலங்குடி கலிபுல்லா நகரில் செல்வகணபதி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் உண்டியல் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் ஒரு சிறுவன் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி விட்டு உண்டி யலை அங்கேயே மறைத்து வைத்து விட்டு சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் உண்டியலை திருடிய 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். விசா ரணையில் சிறுவன் செல்போன் பழுதை சரிசெய்ய பணம் இல்லாததால் உண்டியலை திருடியதாக கூறினார்.