சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

குற்றச்செய்திகள்;

Update: 2025-03-12 05:29 GMT
ஆலங்குடி அருகே எரிச்சியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 54). இவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், கீரமங்கலம் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துைரயின் பேரில், கலெக்டர் அருணா, பன்னீர்செல் வத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் திருச்சி மத்திய சிறை யில் அடைத்தனர்.

Similar News