கோவை: கொடநாடு வழக்கு -வீரபெருமாள் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்

கொடநாடு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாதுகாவலராக இருந்த, வீர பெருமாளிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.;

Update: 2025-03-12 05:29 GMT
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி சிறப்பு விசாரணைக் குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அவரிடம் அப்போதைய பாதுகாப்பு பிரிவு ஆய்வாளராக இருந்த கனகராஜ், உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாகவும், அவர் தனது செல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி, நேற்று வீரபெருமாள் கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும், கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை குறித்தும் நடராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டு, விசாரணை நடைபெற்றது.

Similar News