கீரனுார்: நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நிகழ்வுகள்;

Update: 2025-03-12 05:31 GMT
கீரனுார் கோட்டத்துக்கு உட்பட்ட கீரனூர், விராலிமலை, குன்றாண்டார்கோவில், கிள்ளுக் கோட்டை, மாத்தூர், தொண்டைமான் நல்லுார் ஆகிய பகுதிகளுக்கான மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் அம்மாசத்திரம் துணைமின் நிலைய வளா கத்தில் உள்ள கீரனுார் செயற்பொறியாளர் அலுவ லகத்தில் நாளை (13ம் தேதி) காலை 11 மணி முதல் ஒரு மணி வரை நடக்கிறது. புதுக்கோட்டை மேற் பார்வை பொறியாளர் அசோக்குமார் தலைமை வகித்து கோரிக்கை மனுக்களை பெற்று கொள்கிறார். எனவே, மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கீரனுார் செயற்பொறியாளர் பிரேம் ஆனந்த் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News