ஆலங்குடி: மழையால் ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு!

நிகழ்வுகள்;

Update: 2025-03-12 05:35 GMT
ஆலங்குடி அருகே உள்ள மங்களாபுரத்தில் கருப்பர், முனீஸ்வரர், சின்னப்பட்டவர் கோயில் திருவிழாவையொட்டி அம்புலி ஆற்று பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டு இன்று (12ம் தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் விட்டு, விட்டு மழை பெய்து வந்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டு வரும் 16ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் அன்னவாசலில் தர்மசம்வர்த்தினி சமேத விருத்தபுரீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று நடக்கவிருந்த ஜல்லிக்கட்டு போட்டியும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு 16ம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News