குமரி மாவட்டம் தலக்குளம் பகுதி சேர்ந்தவர் வின்சென்ட் (44). இவர் திங்கள்சந்தை தினசரி காய்கறி சந்தையில் காய்கறிகள் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று வியாபாரம் முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் பட்டன் விளையை சேர்ந்த சுஜித் (19) என்பவர் வின்சென்டை தடுத்து நிறுத்தி மது அருந்த பணம் கேட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக வின்சென்று தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுஜித் கத்தியை காட்டி மிரட்டி வின்சென்ட் பாக்கெட்டில் இருந்த ரூபாய் 1500-ஐ எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வின்சென்ட் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.