கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர்

மதுரை மேலூரில் திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டு பேசினார்.;

Update: 2025-03-12 14:58 GMT
மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மேலூர் நகரில் 'தமிழ்நாடு போராடும்' 'தமிழ்நாடு வெல்லும்' என்ற தலைப்பில் ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன பொது கூட்டம் இன்று (மார்ச்.12) இரவு பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின் தலைமை வகித்தார். வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி சிறப்புரையாற்றினார். சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி உரை ஆற்றினர். முன்னதாக அமைச்சர் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். .

Similar News