அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் பணி: இருபாலரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை சரிபார்த்துக்கொள்ள
அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் பணி: இருபாலரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் பதிவை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்.;
அரியலூர், மார்ச் 12: - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருச்சி மண்டலம், அரியலூர் கிளையில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடத்துக்கு ஆண், பெண் இருபாலரும் நிரப்பட்டவுள்ளது. எனவே, அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம் வைத்துள்ள நபர்கள் ஏப்.11 ஆம் தேதிக்குள் அலுவலக வேலை நாள்களில் உரிமம், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் இதர கல்விச்சான்றுகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவினை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அருந்ததியர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் }45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் – 40 வயதுக்குள்ளும், முன்னாள் படை வீரர்கள் }53 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.