தங்க மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா
மதுரை திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.;
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பங்குனி பெருவிழா நடைபெற்று வருகிறது. இத் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று (மார்ச்.12) இரவு சுவாமி பரங்கிரிநாதர் அன்னை கோவர்த்தனம்பிகை ரிஷப வாகனத்திலும் சுவாமி முருகப்பெருமான் அன்னை தெய்வானை தங்க மயில் வாகனத்திலும் எழுந்தருளினார்கள்.