சாலை விபத்தில் பல்கலைக்கழக ஊழியர் பலி
மதுரை அருகே டூவீலரில் சென்றவர் சாலை விபத்தில் பலியானார்.;
மதுரை மாவட்டம் செக்கானுாரணி அருகே கண்ணனுாரை சேர்ந்த ரவி (52) என்பவர் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (மார்ச். 11) இரவு 11:00 மணிக்கு வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விக்கிரமங்கலத்தில் இருந்து செக்கானுாரணிக்கு வந்த ஆட்டோ, ரவி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் துாக்கி வீசப்பட்டு காயம் அடைந்த ரவி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நேற்று (மார்ச் .12)மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து செக்கானுாரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.