சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் தெப்பத் திருவிழா
நரசிம்மர் கோவிலில் தெப்பத் திருவிழா;
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மாசி மகத்தையொட்டி 3 நாள் தெப்பத் திருவிழாவில் நடைபெறும். அதன்படி முதல் நாள் தொப்பத்திருவிழா நடந்தது. பக்தோசிதப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பட்டு வஸ்திரம், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க தக்கான் குளத்தில் மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பத்துக்கும் மேற்பட்ட கிராம பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.