மழையை தொடர்ந்து தாமிரபரணியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்
தாமிரபரணி ஆறு;
.திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இவ்வாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் ஏராளமான பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்கின்றனர்.