உசுப்பூர் ஊராட்சியில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
உசுப்பூர் ஊராட்சியில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

100 நாள் வேலை உறுதித் திட்ட நிதி ரூ.4034 கோடியை தராமல் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் குமராட்சி கிழக்கு ஒன்றியம் உசுப்பூர் ஊராட்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.