கூடப்பாக்கம் துவக்கப்பள்ளியில், பள்ளி ஆண்டு விழா
கூடப்பாக்கம் துவக்கப்பள்ளியில், பள்ளி ஆண்டு விழா;

கூடப்பாக்கத்தில் பள்ளி ஆண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடப்பாக்கம் துவக்கப்பள்ளியில், பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 21 மாணவ, மாணவியர் பங்கேற்று, பேச்சு, கவிதை, நடனம், விளையாட்டு உள்ளிட்ட போட்டிகல் நடத்தப்பட்டு பின்னர் போட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில், பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர். கூடப்பாக்கத்தில் நடந்த பள்ளி ஆண்டு விழாவில், நாட்டுப்புற பாடலுக்கு நடனம் ஆடி பள்ளி மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.