நெமிலியில் மத்திய அரசை கண்டித்து திமுக போராட்டம்
மத்திய அரசை கண்டித்து திமுக போராட்டம்;

நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் கீழ்வீதி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.4000 கோடியை தராத மத்திய அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள் கலந்துகொண்டார். ஒன்றிய அவை தலைவர் நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.