கடமடை ஏரியில் தூர் வாரும் பணி துவக்கம்
பாலக்கோடு அருகே தன்னார்வ அறக்கட்டளைகள் ஒன்றிணைந்து கடமடை ஏரியில் தூர் வாரும் பணி துவக்கம்;
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடமடை ஏரி பரப்பளவில் பெரிய ஏரியா ஆகும் இந்த ஏரி பாசனத்தை கொண்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த நாளையில் பல நாட்களாக ஏரியை தூர் வாராமல் இருப்பதால் மண் கசடு மற்றும் முட்புதர்கள் அதிகரித்து ஏரியில் போதுமான அளவு மழை நீர் சேமித்து வைக்க முடியவில்லை என தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், ஆதி பவுண்டேஷன் பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, ஜெயம் சமுதாய வளமையும் தர்மம் அறக்கட்டளை, டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளைகள் இணைந்து ஏரிகளை தூர்வாரும் பணியை இன்று துவகினார். இதில் ஆதி பவுண்டேஷன் நிறுவனர் ஆதிமூலம், சமுக சேவகர் சுகுமாரன் அறக்கட்டளை நிறுவனர் ஆகியோர் கலந்து கொண்டு தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்தனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.