சாலை ஓரத்தில் ஆண் சடலம் காவலர்கள் விசாரணை

அரூர் மொரப்பூர் சாலையில் ஆண் சடலம் அரூர் காவலர்கள் விசாரணை;

Update: 2025-04-28 11:01 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதி உட்பட்ட அரூர் பேருந்து நிலையத்திலிருந்து மொரப்பூர் செல்லும் சாலையின் ஓரத்தில் இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டீ-சர்ட் அணிந்திருந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த மோப்பிரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி, இதுகுறித்து அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அரூர் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் இறந்தவரின் உடலை மீட்டு ரின் பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்..? எந்த ஊரை சேர்ந்தவர்.? என்பது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News