புதுகை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று மே17 நடைபெற்றது. முகாமினை மண்டல பொது மேலாளர் முகமது நாசர் துவக்கி வைத்தார். முகாமில் அனைத்து பிரிவை சேர்ந்த அலுவலர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பணியாளர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் அனைத்து வகையான கண் பரிசோதனை இலவசமாக செய்து கொண்டனர்.