புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் கட்டுமான பணி நடைபெற்று வரு கிறது. நேற்று இரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இரும்பு சாரத்தில் மின் சாரம் பாய்ந்தது. இதில் பிகார் பச் சாலால் சர்மா (40) மற்றும் 20வயது வாலிபர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பிகார் பச்சாலால் சர்மா பலி யானார். வாலிபர் படுகாயமடைந்தார். இது குறித்து டவுன் போலீசார் விசா ரித்து வருகின்றனர்.