சிலை திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர்.
மதுரை முத்துவின் சிலை திறப்பு விழா பணிகளை இன்று அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.;
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வரும் 31 ம் தேதி இரவு மதுரை மாநகரில் அரசரடி பகுதியில் மதுரை மாநகராட்சியின் முதல் மேயர் முத்து அவர்களின் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடு பணிகள் குறித்து இன்று (மே.24) காலை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுடன் திமுக முக்கிய நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர்.