கணவர் மாயம். மனைவி புகார்
மதுரை திருமங்கலம் அருகே கணவர் மாயம் என மனைவி புகார் அளித்துள்ளார்.;
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கட்டாணிப்பட்டியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மகன் முருகன் (52) என்பவர் ஆர்.ஓ வாட்டர் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் (மே.22) இரவு 11 மணியளவில் வீட்டில் வெளியே தூங்கியுள்ளார். மறுநாள் ( மே.23) காலை இவரது மனைவி ராஜலட்சுமி வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது கணவர் மாயமானது தெரிந்தது. இது குறித்து அவர் நேற்று (மே.23) டி. கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன நபரை தேடி வருகின்றனர்.