திருப்பத்துாரில் பாஜ நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட தலைவர் தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது

திருப்பத்துாரில் பாஜ நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட தலைவர் தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது;

Update: 2025-06-17 11:23 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்துாரில் பாஜ நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட தலைவர் தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில துணைத்தலைவர் டால்பின் ஸ்ரீதரன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளரை சந்தித்த அவர்.. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பாஜ அரசு என்னென்ன சாதனைகள் செய்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை எவையெல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்க நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் மூன்று தேர்தலை சந்தித்த பாஜக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் 99 சதவீதம் நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக விவசாயம், இளைஞர் நலன், மகளிர் மேம்பாடு,‌ தொழில்நுட்பம், ராணுவம், வெளிநாட்டு உறவு, உள்நாட்டு பாதுகாப்பு, ரயில்வே துறை, சாலை போக்குவரத்து, விமான போக்குவரத்து என பல்வேறு துறையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. மெட்ரோ ரயில் சேவையில் உலக அளவில் இந்தியா‌ 2ம் இடத்தில் உள்ளது. தமிழகம் பொருத்தவரை திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்று கூட முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதே பாஜகவின் குற்றச்சாட்டாக உள்ளது எனவும் குறைந்த காலத்தில் அதிக அளவில் கடன் வாங்கிய முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது . 8 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர். வாலிபர்கள் அதிகளவில் போதைக்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர். 2026 சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு மக்கள் முடிவு கொண்டு வருவார்கள் என கூறினார். இந்நிகழ்வில் முன்னாள் தலைவர் வாசுதேவன், துணை தலைவர் அன்பழகன், மாநில செயற்குழு உறுப்பினர் தீபா நகர தலைவர் மேகநாதன் உட்பட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News