அரசுப் பள்ளி மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு;
திருப்பத்தூர் மாவட்டம் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி விஜயலட்சுமி தலைமையில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் காவல்துறையின் காவலன் செயலி பயன்பாடுகள் குறித்தும் ஆபத்துக் காலங்களில் காவல்துறையின் உதவியை எவ்வாறு நாடுவது என்பது குறித்தும் மாணவிகளுக்கு ஆய்வாளர் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.உடன் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் இருந்தனர்.