பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியங்களில் தமிழ் எழுத்துப் பிழைகளை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியங்களில் தமிழ் எழுத்துப் பிழைகளை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை;

Update: 2025-06-24 11:35 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக முகப்பு வாசல் அருகே உள்ள பக்கவாட்டு சுவர்களில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியங்களில் தமிழ் எழுத்துப் பிழைகளை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக முகப்பு வாசல் அருகே உள்ள பக்கவாட்டு சுவர்களில் பெண் குழந்தைகளின் கல்வி மேம்பட வேண்டும் பெண் குழந்தைகளின் குழந்தை திருமணம் தவிர்க்கப்பட வேண்டும் உள்ளிட்ட பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் முதியோர்களின் பாதுகாப்பு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அழகிய வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஆனால் அந்த ஓவியங்களின் அருகாமையில் எழுதப்பட்டுள்ள மாவட்டம் என்பதற்கு பதிலாக மாட்டம் என்று தவறாக எழுதப்பட்டுள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அந்த வழியாக வந்து செல்கிறார்கள் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ மாணவிகள் அந்த வழியாக கடந்து செல்கின்றனர் இது போன்று தமிழ் எழுத்துக்களில் உள்ள பிழைகளை அவர்களும் அப்படியே வாசிக்க வேண்டிய அவலம் ஏற்படும் எனவே தமிழ் எழுத்துக்களின் பிழைகளை துறை சார்ந்த அதிகாரிகள் பொறுப்புடன் மேற்பார்வையிட்டு அதை சரி செய்ய வேண்டும் என்று அந்த வழியாக சென்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Similar News