திருப்பத்தூரில் முதலமைச்சர் வருகையோட்டி திரளான போலீசார் குவிப்பு

திருப்பத்தூரில் முதலமைச்சர் வருகையோட்டி திரளான போலீசார் குவிப்பு;

Update: 2025-06-25 07:55 GMT
திருப்பத்தூர் மாவட்டம் இன்று மாலை திருப்பத்தூரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் திரு உருவ சிலையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில் மேடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மற்றும் நாளை திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ள நிலையில்... இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசல் அருகே 19 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலையை முதற்கட்டமாக திறந்து வைக்க உள்ளார்.. இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏவா வேலு முன்னேற்பாடு பணிகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்ட நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மேலும் கூடுதலான பாதுகாப்பை மேம்படுத்த திருவாரூரில் இருந்து பி டி டி எஸ் பொறுப்பாளர் எஸ் எஸ் ஐ குமார் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு மெட்டல் டிடெக்டர் புருடர் உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு முதலமைச்சர் கலந்து கொள்ள இருக்கும் மேடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோப்பநாய் குகன் உதவியுடன் பரிசோதனை செய்து பாதுகாப்பை தீவிரப்பட்டு வருகின்றனர்.

Similar News