திருப்பத்தூரில் தமிழக முதலமைச்சரை உற்சாக வரவேற்பு!

திருப்பத்தூரில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை உற்சாக வரவேற்பு!;

Update: 2025-06-26 03:32 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு வருகை புரிந்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலையை திறந்து வைக்க முதல்வர் ஸ்டாலின்! வரும்போது அடுத்தடுத்து இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்தில் சிக்கி கொண்டு அவதிக்குள்ளாகி சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது! திருப்பத்தூர் மாவட்டம் உதயமானதில் இருந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக திருப்பத்தூருக்கு வருகை புரிந்து நாளை முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்க உள்ளார் இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 9 அடி உயரம் உள்ள வெண்கல முழு உருவ சிலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க வரும்போது கூட்டத்தின் நடுவே இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கி அவதிக்குள்ளானது சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது காவல் துறையினர் உடனடியாக போக்குவரத்தை சரி செய்து அனுப்பி வைத்தனர் அதனைத் தொடர்ந்து திருவுருவ சிலையை திறந்து வைத்து 65அடி கம்பத்தில் உள்ள திமுக கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதன்பின்பு கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவியம் மரியாதை செய்தார். பின்னர் மேடையின் அருகே உள்ள பொதுமக்களுக்கு கை கொடுத்து கை குலுக்கி சென்றார் பின்னர் அங்கிருந்து இரவு சுற்றுலா மாளிகைக்கு தங்கச் சென்றார். இந்தநிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன் எவ.வேலு, காந்தி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி என் அண்ணாதுரை மற்றும் கதிரானந்த், திருப்பத்தூர் மாவட்ட திமுக எம்எல்ஏக்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன், மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News