ஜோலார்பேட்டையில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது
ஜோலார்பேட்டையில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது;
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் நெல்லூர் வழியாக திருப்பத்தூர் செல்லும் ரயில் விபத்து! தென்னக ரயில்வே துறை சார்பில் தத்ரூபமாக நடைபெற்ற போலி ஒத்திகை! உண்மை என நம்பிய பொதுமக்களால் 100க்கு பறந்த கால்கள்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே துறை சார்பில் ரயில் விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பயணிகளை பாதுகாப்பாக மீட்பது என போலி ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது திருப்பூரில் இருந்து நெல்லூர் செல்லும் பேசஞ்சர் ரயிலில் 2000 பயணிகள் பயணிப்பதாகவும் அந்த ரயில் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் வந்தபோது அந்தபேசஞ்சர் ரயில் B1, C1,C2 உன்கிட்ட ஏசி பெட்டியும் D1 என்ற பொது ஜன பெட்டியும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் இதன் காரணமாக 50 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகவும் மேலும் 10 பேர் உயிரிழந்ததாகவும் தத்ரூபமாக காண்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அக்கம் பக்கத்தினர் ஏதோ ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டதாக கூறி 100 என்ற காவல் எண்ணுக்கு பொதுமக்கள் அடிக்கடி போன் பண்ண தான் காரணமாக என்ன செய்வது என தெரியாமல் போலீசார் திகைத்துள்ளனர். மேலும் 10 ஆம்புலன்ஸ் தேசிய பேரிடர் மீட்பு குழு சார்பில் இரண்டு மோப்ப நாய்கள் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் ஒரு மோப்பநாய் என மூன்று நாய்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வின் போது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, ரயில்வே தெற்கு முதல் நிலை அலுவலர் கணேஷ் ,சென்னை கோட்ட கூடுதல் மேலாளர் ஸ்டேஜ் பிரதாப் சிங் மற்றும் சென்னை மண்டல ரயில்வே பாதுகாப்பு படை,தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் , தீயணைப்புத் துறையினர், ரயில்வே போலீசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.